The worker was killed when his bike collided with a lorry parked on the roadside near Solingar.


சோளிங்கர் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் தொழிலாளி பலியானார்.


சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பகுதியை சேர்ந்தவர் வேலு (56). சோளிங்கர் தனியார் தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உடல் நிலை சரியில்லாததால் சோளிங்கரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மருமகன் குணசேகரனுடன் பைக்கில் சென்றார்.

பைக்கை குணசேகரன் ஓட்டிச் சென்றார். பின்னர் சிகிச்சை முடிந்து மீண்டும் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது தாளிக்கால் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிய போது எதிர்பாராத விதமாக சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக இவர்கள் சென்ற பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வேலு பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த குணசேகரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம் புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

தகவலறிந்த சோளிங்கர் எஸ்ஐ.சீனிவாசலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேலுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.