ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து வரும் திட்டப்பணிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்து பேசியதா வது:
15வது நிதி திட்டத்தின் கீழ் பணிகள் முடிப்பதில் மாவட்டம் பின்தங்கி உள்ளது. சுகாதாரம் மற்றும் குடிநீர் சம்பந்தமான பணிகளுக்கு இது வரையில் பணி தேர்வு செய்து பணியாணைகள் வழங்கப்படவில்லை. உடனடியாக பணியினை தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைக்க வேண்டும்.

ஒவ்வொரு வட்டாரத்திலும் கிராம பஞ்சாயத்து, ஒன்றியம், மாவட்ட பஞ். நிதி பணிகளில் பின்தங்கி இருக்கிறோம். இன்னும் ஒருவாரத்துக்குள் பணிகளை தேர்வு செய்து பணி ஆணைகளை சமர்ப்பிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைத்து பஞ்சாயத்து களிலும் அதிக பணியாட்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

பணியாட்கள் வேலை செய்வதை வருகை பதிவேட்டில் பதிவு செய்து இருக்கும் இடத்தலிருந்தே கைபேசி (செல்) வாயிலாக பதிவேற்றம் செய்து உறுதி செய்யவேண்டும். தினமும் 8 மணி நேரம் பணி செய்வதை உறுதிசெய்ய அனைத்து பஞ்சாயத்துகளிலும் காலை 8.10 மணிக்குள் 'நேஷ னல் மொபைல் மானிட்டரிங் சிஸ்டம் மொபைல் ஆப்பில்' எத்தனை பணியாளர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை பதி வேற்றம் செய்ய வேண்டும்.

இதனை வரும் திங்கட்கிழமையிலிருந்து உறுதிப்படுத்த வேண்டும். பஞ்.யூனியன் கட் டுப்பாட்டில் உள்ள அங்கன் வாடி, பள்ளி கழிவறை, துாய்மை செய்வது மற்றும் ஏதாவது பழுதடைந்திருந்தால் அதனை சரிசெய்வதற்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே இடிப்பதற்கு அனுமதி அளித்துள்ள பழுதடைந்துள்ள பள்ளி கட்டடங்களை உடனடியாக இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டு வரும் சாலைப் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். பணிகள் தரமான தாக இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். ஜல் தீவன் மிஷன் திட்டத்தின் இலக்கினை இந்தமாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். 100 சதவீதம் பணியினை வரும் மார்ச் மாதத்துக்குள் முடித்தாக வேண்டும் என்பதை மனதில் வைத்து அலுவலர்கள், பொறியாளர்கள் குடிநீர் திட்டப்பணியில் கவனம். செலுத்த வேண்டும்.

நடந்துவரும் பணிகள், முடிவுற்ற பணிகள் குறித்த புகார்கள் வந்தால் அதற்கு உடனுக்குடன் அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டத்தில் ஊரக வளச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, உதவி இயக்குநர் குமார், செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் ஊரக வளர்ச் சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.