குல தெய்வம் தெரியாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் எந்த ரூபத்திலாவது உங்கள் குலதெய்வம் உங்களுக்கு தெரியவரும் மேலும் குலம் காக்க உங்கள் குலதெய்வம் உங்கள் இல்லம் தேடி வந்து இனிமையான வரங்களை அள்ளி கொடுக்கும் இந்த 3 பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து பூஜையறையில் வைத்து வழிபாடு செய்தால் போதும்.

ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் நிச்சயமாக தெய்வ சக்தி வாசம் செய்ய வேண்டும் குறிப்பாக குலதெய்வம் நம்முடைய வீட்டில் இருந்து நமக்கு வரங்களை அள்ளி கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் இதற்கு நாம் தினந்தோறும் குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக அந்த வீட்டுப் பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொள்வது அந்த வீட்டிற்கு நன்மையை கொடுக்கும் பெண்களின் இந்த வேண்டுதல் அவர்களுடைய குலத்தை காக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

உங்களுடைய வீட்டில் குலதெய்வத்தின் திருவுருவப்படம் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி குலதெய்வத்தை வேண்டி நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்தால் நிச்சயமாக உங்கள் குலதெய்வம் உங்கள் இல்லம் தேடி வந்து இனிமையான வரங்களை அள்ளி கொடுக்கும் அப்படி ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

இந்த பரிகாரத்திற்க்கு தேவையான பொருட்கள் சுத்தமான தேன் 4 ஸ்பூன் ஏலக்காய் 3 கிராம்பு 3 ஏலக்காய்களை ஒன்றும் இரண்டுமாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள் ஒரு சிறிய கண்ணாடி பாட்டிலில் முதலில் தேனை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு இடித்து வைத்திருக்கும் ஏலக்காய், லவங்கம் இந்த மூன்று பொருட்களையும் போட்டு அந்த பாட்டிலை மூடி விடுங்கள்.

அவ்வளவு தான் நீங்கள் தயார் செய்த இந்தத் தேன் பாட்டிலை உங்கள் வீட்டு பூஜையறையில் குலதெய்வ படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும் குலதெய்வ படம் வீட்டில் இல்லாதவர்கள் பூஜை அறையில் இந்த பாட்டிலை அப்படியே ஏதாவது ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளலாம் இந்த பாட்டிலில் இருக்கும் தேனை தயார் செய்யும் நாள் அன்று உங்கள் வீட்டு வழக்கப்படி குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்வீர்களோ அதேபோல உங்கள் வீட்டு பூஜை அறையில் கட்டாயமாக வழிபாடு செய்ய வேண்டும்.

சில பேர் சர்க்கரை பொங்கல் வைத்து குல தெய்வ வழிபாடு செய்வார்கள் சில பேர் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வார்கள் உங்கள் வீட்டு வழக்கம் எதுவோ அதை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம் குலதெய்வத்தை மனதார வேண்டி தேனோடு ஏலக்காயும் லவங்கத்தையும் சேர்த்து வைக்கும் போது குலதெய்வம் நிச்சயமாக உங்கள் வீட்டில் வசமாகும் இந்த பாட்டிலில் இருக்கும் பொருட்களை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றி வைத்தாலும் போதும்.

உங்களுடைய வீட்டில் குலதெய்வம் வாசம் செய்யவில்லை என்ற சூழ்நிலை இருந்தாலும் வீட்டுவாசலில் குலதெய்வம் வீட்டிற்குள் வர முடியாமல் நின்று கொண்டிருந்தாலும் உங்கள் குலதெய்வமே தெரியவில்லை என்றாலும் தெரியாத குலதெய்வத்தை நினைத்து இதை செய்யும் பட்சத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டு குல தெய்வம் உங்கள் வீட்டிற்கு ஓடோடி வந்து விடும்.


குல தெய்வம் என்பவர் யார்?


நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குல தெய்வம்.

தந்தை பாட்டன், பூட்டன் வழியில் வணங்கி வந்த தெய்வத்தை குல தெய்வம். தந்தை பாட்டன் வழியில் கோத்திரங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவர்களின் சந்ததி ஒரே கோத்திரத்தில் இருக்கும். தாய் வழி என்பது வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து, தந்தை வழி கோத்திரத்தில் மாறுவர். இதை ரிஷி வழி பாதை எனவும் கூறுவதுண்டு.

ஒருவருக்கு குணங்கள் மாறி இருக்கலாம், ஜாதகம், பிறந்த தேதி மாறி இருக்கலாம். ஆனால் அவர்களின் ரிஷி வழி பாதை என்று பார்த்தால் அவர்களின் குலதெய்வம் ஒன்றாகத் தான் இருக்கும்.

இதன் காரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், பெயர் வைத்தல், காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணத்திற்கு பிந்தைய வழிபாடு என எல்லாவற்றையும் குல தெய்வம் கோயிலில் தான் செய்து வருவது வழக்கமாக இன்றும் பெரும்பாலானோர் பின்பற்றி வருகின்றனர்.

நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த, வணங்கி வந்த குல தெய்வத்தைக் கும்பிடும் போது, அவர்கள் வரிசையில் நின்று வணங்கிய அந்த இடத்தில் நின்று நாம் வணங்கும் போது, குல தெய்வத்தின் அருள் கிடைப்பதோடு, முன்னோர்கள் பித்ருக்களாக வந்து ஆசி வழங்குவர்.

மயிலாடுதுறையில் வானத்தை முட்டும் அளவிற்கு உயரமான மற்றொரு அத்தி வரதர் பெருமாள்... தரிசிக்கலாம் வாங்க

முன்னோர்களின் கூற்று படி,

“நாளும், கோளும் கைவிட்டாலும் கூட, நம் குலதெய்வம் நம்மைக் கைவிடாது” என கூறியுள்ளனர்.

குலதெய்வத்தை முறைப்படி வணங்கினால், நாம் உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும், அவர் நம் கூடவே இருந்து நம்ம காப்பார்.


குல தெய்வத்தை எப்படி வழிபடுவது:


குல தெய்வம் தெரிந்தவர்கள் அடிக்கடி சென்று வணங்குவது நல்லது. அப்படி இல்லையெனில் ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று, குல தெய்வத்திக்கு அபிஷேகம் செய்து புது துணி சாத்தி, பொங்கலிட்டு வழிபட்டு வருவது சிறந்தது.

சிலரின் வீட்டில் பணம், பொருள் என எல்லாம் இருந்தும் நிம்மதி இருக்காது. இது குல தெய்வ வழிபாடு செய்யததால் ஏற்படும் குறை என கூறுவார்கள். அவர்கள் குல தெய்வத்தை வணங்கினால் பிரச்சினை தீரும்.

நாம் தேடினால் நம் குல தெய்வம் கிடைப்பார். அது வரையில், வீட்டில் கலசத்தில் தண்ணீர் வைத்தோ, விளக்கேற்றியோ அதை குல தெய்வமாக வணங்கி வாருங்கள். குல தெய்வத்தின் அருளை பெற்றிடுங்கள்.