அடுத்தடுத்து திரை பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால், மீண்டும் தமிழகத்தில் கொரோனாவின் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதா? என்கிற அச்சம் எழுந்துள்ளது. சமீபத்தில் தான் நடிகர் கமல், அர்ஜுன், மற்றும் விக்ரம் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் தகவல் வெளியாகி வைரலானது. இவர்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படம் நடிக்க துவங்கியுள்ள, வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி.

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.