ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கிருஷ்ணாவரம் குடியிருப்பு தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன்(49). ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவரது மனைவி சுமிதா. இவர் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், தம்பதியினரிடையே கடந்த சில மாதங்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வேல்முருகனுக்கும். மனைவி சுமிதாவுக்கும். இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மனமுடைந்த வேல்முருகன். வீட்டுகுளியல் அறையில் இருந்த கெமிக்கல்லை குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த சுமிதா அவரை மீட்டு, ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வேல்முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சுமிதா ஆற்காடு தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.