ராணிப்பேட்டை நகராட்சிப் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.

ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வருபவர் செல்வகுமார். இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன் வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது உதவிபொறியாளரான செல்வகுமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறையினர் டி.எஸ்.பி., மதியழகன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொறியாளர் வீட்டில் 40 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு உண்டான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து சரிபார்த்து வருவதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.