வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு கிராமத்து சேர்ந்து பஞ்., தலைவர் தேவேந்திரன் தலைமையில் கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தும் விதமாகவும் இயற்கை வளங்கள் மற்றும் தமிழக பாரம்பரிய மரங்களை பராமரிக்கும் விதமாக பத்தாயிரம் மரக்கன்றுகள் மற்றும் 50 ஆயிரம் பனை விதைகள் நடும் முயற்சியினை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன்
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கிராம மக்களின் கூட்டு முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக மரக்கன்றுகளை பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பொது மக்களுடன் இணைந்து நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து அப்பகுதியில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களையும் மரக்கன்றுகளையும் வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து கலெக்டரிடம் மனு வழங்கினர்.

50 ஆயிரம் பனை விதைகள் 10 ஆயிரம் மரக்கன்றுகள் இலக்கு