ராணிப்பேட்டை மாவட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக தமிழ் நாடு குடிநீர் வாரியத்தால் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க விழா ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. 

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வாக னத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். ராணிபேட்டை மாவட்டத்தில் காணொலி காட்சி மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் கிராமப்புற மக்கள் மற்றும் நகர்புற மக்களுக்கு வரும் 5ம் தேதி வரை முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் டிஆர்ஒ முஹம்மது அஸ்லம், நிர் வாக பொறியாளர் ஆறுமுகம், உதவி நிர்வாக பொறியாளர் திருமால், துணை நிலநீர் வல்லுநர் ராமன் மற்றும் உதவி நிலநீர் வல்லுநர் பரிதிமாற்கலைஞர் ஆகியோர் கலந்துகொண்டனர்.