ராணிப்பேட்டை நகராட்சி 19,623 ஆண் வாக்காளர்கள், 22,062 பெண் வாக்காளர்கள், இதர 4 என 41,689. வாலாஜா நகராட்சி 12,802 ஆண் வாக்காளர்கள், 13,986 பெண் வாக்காளர்கள், இதர 2 என மொத்தம் 26,790 ஆகும்.

ராணிப்பேட்டை:


ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட 5 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் 01.11.2019 அன்று வெளியிடப்பட்ட சட்டமன்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சி அமைப்பு அலுவலகத்திலும் பட்டியல் வெளியிடப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர்களின் விவரம்:-


அரக்கோணம் நகராட்சி 32,330 ஆண் வாக்காளர்கள் 34,515 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 66,845. ஆற்காடு நகராட்சி 22,468 ஆண் வாக்காளர்கள், 24,519 பெண் வாக்காளர்கள், இதர 1 என மொத்தம் 46,988, மேல்விஷாரம் நகராட்சி 19,500, ஆண் வாக்காளர்கள் 20,099, பெண் வாக்காளர்கள் இதர 1 என மொத்தம் 36,900.

ராணிப்பேட்டை நகராட்சி 19,623 ஆண் வாக்காளர்கள், 22,062 பெண் வாக்காளர்கள், இதர 4 என 41,689. வாலாஜா நகராட்சி 12,802 ஆண் வாக்காளர்கள், 13,986 பெண் வாக்காளர்கள், இதர 2 என மொத்தம் 26,790 ஆகும். அம்மூர் பேரூராட்சியில் 5,188 ஆண் வாக்காளர்கள், 5,560 பெண் வாக்காளர்கள், இதர 2 என மொத்தம் 10,750. கலவை பேரூராட்சியில் 3,733 ஆண் வாக்காளர்கள், 3,975 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7,708. காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 5,855 ஆண் வாக்காளர்கள், 6,317 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 12,172. நெமிலி பேரூராட்சியில் 4,489 ஆண் வாக்காளர்கள், 4,820 பெண் வாக்காளர்கள், இதர 1 என மொத்தம் 9,310. பனப்பாக்கம் பேரூராட்சியில் 4,869 ஆண் வாக்காளர்கள், 5,208 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 10,077. தக்கோலம் பேரூராட்சியில் 4,581 ஆண் வாக்காளர்கள், 4,817 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9,398. திமிரி பேரூராட்சியில் 6,523 ஆண் வாக்காளர்கள், 6,956 பெண் வாக்காளர்கள், இதர 2 என மொத்தம் 13,481. விளாப்பாக்கம் 3,471 ஆண் வாக்காளர்கள், 3,474 பெண் வாக்காளர்கள், இதர 5 என மொத்தம் 79,841 ஆகும்.