ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:
இந்திய திருநாட்டின் பாதுகாப்பிற்காக முப்படை வீரர்கள் தங்கள் பெற்றோர், மனைவி, குழந்தைகளை பிரிந்து நாட்டின் பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணிகளில் ஈடுபடும் முப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின் தியாகங்களை போற்றும்வகையில் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக் காகவும் கொடிநாள் நிதியினை அதிகளவில் வழங்குவது ஒவ்வொருவரின் கடமையாகும்.

எனவே, ராணிப்பேட்டை உள்ள பொதுமக்கள், வணிகர்கள். தொழில் நிறுவனங்கள் தங்களால் இயன்ற கொடிநாள் நிதியினை வழங்கி முப்படை வீரர்கள் மற்றும் படை வீரர் குடும்பங்களின் வாழ்க்கை சிறக்க அனைவரும் தங்களால் இயன்ற கொடிநாள் நிதியை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ முஹம்மது அஸ்லாம். ஆர் டிஓ பூங்கொடி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் பாண்டியராஜன், தாசில்தார் ஆனந்தன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.