தெற்காசிய நாடுகளுக்கான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி 29ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை நேபாளில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ள இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர்களுக்கு பாராட்டு விழா சோளிங்கர் யூனிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட தலைவர் நரசிம்மன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஞானவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெகதீஷ் வரவேற்றார்.

விழாவில் தெற்காசிய நாடுகளுக்கான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள தமிழக டென்னிஸ் பால் கிரிக்கெட் வீரர்கள் சரத்குமார், கார்திக், சதீஷ், மணிகண்டன், பிரியங்கா, பிரீத்தி ஆகியோரை சிறப்பு அழைப்பாளர் சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க துணை தலைவர் வேம்பு சீனிவாசன், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் நரசிம்மன், பாண்டியநல்லூர் பஞ்.தலைவர் கல்யாணி ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கி பாராட்டி பேசினார்கள்.
இதில் தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் முனிரத் தினம், ராணிப்பேட்டை மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் ஜெகதீஷ், விநாயகம், வடிவேலு, கருணாகரன், சுந்தர் மற்றும் விளையாட்டு வீரர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் வடிவேலு நன்றி கூறினார்.