திருடுபோன 54 செல்போன்கள் மீட்பு சைபர் கிரைம் போலீசார் சுறு..சுறு..

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல இடங்களில் திருடு போன செல் போன்களை கண்டுபிடிக்க எஸ்பி தீபாசத்யன் தலைமையில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் முத்துக்கருப்பன், சைபர் கிரைம் போலீசார் ராஜ்குமார், ஐஸ்வர்யா  ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

திருடுபோன செல் போன்கள் அவற்றின் ஐஎம்ஐ எண்ணை வைத்து தற்போது யாருடைய பயன்பாட்டில் உள்ளது என்று கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த வகையில் மீட்டெடுக்கப்பட்ட 54 செல்போன்களை அவற்றின் உரிமையாளரிடம் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எஸ்பி தீபாசத்யன் வழங்கினார். அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சத்து 12 ஆயிரமாகும்.