ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராம மக்களிடம் திண்ணைப் பிரசாரம் செய்து வருகின்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று மேற்கு மாவட்ட பாமக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக அவசரக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை ராணிப்பேட்டை முத்துக்கடை அருகே உள்ள பாமக தலைமை அலுவலகத்தில், மாவட்டத்தலைவர் கே.எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் லட்சுமணன், லோகநாதன்,ரஜினி,சக்கரவர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் விக்ரமன், பரத், நீலகண்டன், செல்வராஜ், சுரேஷ், சபரீசன், பழனிவேல், நகர செயலாளர் கள்ஞானசேகரன், அறிவுச்சுடர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் சரவணன் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி, மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில பசுமைத்தாயகம் நிர்வாகி மகேந்திரன், செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், வழக்கறிஞர் ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் அமுதா சிவா நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராம மக்களை சந்தித்து திண்ணைப் பிரசாரம் செய்து வருகின்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் அனைத்து இடங்களில் வெற்றிபெற வேண்டும். தை மாதம் 1ம் தேதியை தமிழர் திருநாளாக அறிவிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தில் உள்ள விவசாய பெருங் குடி மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.