காவேரிப்பாக்கம் அடுத்த மேலப்புலம்புதூர் சமத்துவபுரம், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி(65) மற்றும் கிருஷ்ணன் (34). இவர்கள் இருவர் வீடும் அருகருகே அமைந்துள்ளது. இருவரும் விவசாய வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 23ம்தேதி அதிகாலையில் கோவிந்தசாமி மற்றும் இவரது மகன் சுரேஷ் (40) ஆகியோர் குளிர் காய்வதற்காக அருகே இருந்த குப்பைகளை கொளுத்தி உள்ளனர்.
இதில் புகை மூட்டம் ஏற்பட்டு, அருகே உள்ள கிருஷ்ணன் வீட்டு பக்கம் சென்றுள்ளது.

இது தொடர்பாக தட்டிக் கேட்டபோது இரு தரப்பினருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசம் அடைந்த கோவிந்தசாமி தரப்பினர் கிருஷ்ணன் கை மீது கத்தியால் வெட்டியுள்ளனர். இதனை பார்த்த இவரது மனைவி கற்பகம்(31), தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருடைய சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து எங்களிடம் வைத்துக் கொண்டால் உங்களை கொலை செய்யாமல் விடமாட் டேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் இதில் படுகாயமடைந்தவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இதுதொடர் பாக கிருஷ்ணன் நேற்று அவளூர் போலீசில் புகார்கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், ரவி, ஆகியோர் வழக்கு பதிவு செய்து, கோவிந்தசாமி மற்றும் இவரது மகன் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.