காவேரிப்பாக்கம் யூனியனுக்கு உட்பட்ட சிறுவளையம் பஞ்., செயலராக பணியாற்றி வருபவர் சங்கர் (47), நேற்று முன்தினம் காலை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லோகநாயகி சிறுவளையம் பஞ்.,இல் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்ய நேரில் சென்றுள்ளார்.
அப்போது பஞ்.அலுவலகம் பூட்டி இருந்துள்ளது. எந்தவித தகவலும் இல்லாமல் சங்கர் பணிக்கு வராமல் இருந்துள்ளார். செல்போனில் அவரை தொடர்பு கொண்ட திட்ட இயக்குநர் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் உடனடியாக அலுவலகம் வரவேண்டும் என கூறியுள்ளார்.
அதற்கு நேரில்வர மறுத்துள்ளார். இத்நிலையில் நேற்று அவர் மீது தடவ நடவடிக்கை எடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சஸ்பெண்ட் செய்துள்ளார்.