ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானமும், வேலை வாய்ப்பும் கிடைக்கச் செய்வதோடு, தமிழ் நாட்டின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திட விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையினை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் (TNMSGCF) தொடங்கப்பட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு குறைந்த செலவில் மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது. இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 16ம் தேதி துவக்கி வைத்தார். 

அதன் படி தமிழக அரசின் வனத்துறை சார்பில் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தில் உள்ள வனச்சரக அரசு நாற்றாங்கால்களில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 950 கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்க தயாராக உள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், இதர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மரக்கன்றுகள் பெறுவதற்கு உழவன் செயலி அல்லது அருகில் உள்ள வேளாண்மைவிரி வாக்கமையத்தில் பதிவு செய்து கன்றுகள் பெறுவதற்கான உத்தரவு நகலை பெற்று தேவையான மரக்கன்றுகளை வேலம் மற்றும் பள்ளிகொண்டா ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றாங்காலில் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

வரப்பு நடைமுறை என்றால் ஏக்கருக்கு 40 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வழங்கப்படும். ராணிப்பேட்டை மாவட்டத் தில் 18295 லட்சம் மரக் கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மரக்கன்றுகள் பராமரிக்க விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை யாக உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ் வொரு ஆண்டும் ₹7 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ₹21 வழங்கப்படும்.

கன்றுகள் உற்பத்தி மழைநீரை பயன்படுத்தி டிசம்பர் மாதத்திற்குள் நடவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் களப்பணியாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறு குறு விவசாயிகள், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவ தால் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் ஒரு நிரந்தர வைப்புதொகை கிடைப்பதுடன், விவசாய நிலங்களின் மண் வளம் மேம்படும். மாநிலத்தின் பசுமை பரப்பு, சுற்றுப்புறச்சூழல் மேம்படும். எனவே, ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Ranipettai district Farmers can apply for agro-forestry scheme