அரசு மற்றும் உதவிப்பெறும் கலைமற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பயிலும் பிற்படுத்தப்பட்டோர்., மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தின்கீழ் எந்தவித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது..

அதில் 2021-22 ஆண்டிற்கான முதுகலை (எம்ஏ,எம்எஸ்சி, எம்காம்,எம்பில், பிஎச்டி) பாலிடெக்னிக் (மூன்றாண்டுபட்டயப்- படிப்பு), தொழிற்படிப்பு, எம்பிபிஎஸ், கால்நடைமருத்துவம்,பல் மருத்துவம், சித்தமருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் பிரிவுகள், வேளாண்மை,சட்டம் போன்ற படிப்புகளில் பயிலும் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க பெற்றோரது வருமான உச்சவரம்பை ரூ2 லட்சத்திலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரமாக அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்.மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகம் (அ)பிற்படுத்தப்பட்டோர்நல இயக்கக மின்னஞ்சல் முகவரி [email protected] மற்றும் 044-29515942 என்ற தொலைபேசியின் மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தை அனுகலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தெரிவித்துள்ளார்