வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த 15-ம் தேதி சுவரைத் துளையிட்டு நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 15 கிலோ தங்கம், 500 கிராம் வைரம் கொள்ளை போயின. முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட நபரின் சிசிடிவி கேமரா பதிவை வைத்து, கொள்ளையரைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இக் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒடுக்கத்தூர் அடுத்த குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட நகையானது உருக்கப்பட்டு சுடுகாட்டில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து நகைகளை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்படுள்ள டீக்காரமிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.