ராணிப்பேட்டை, சிப்காட்டில் ஒமைக்ரானா?  வதந்தி என்கிறார் அதிகாரி 

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலை அலுவலர்கள் மும்பை சென்று வந்தனர். அவர்களுக்கு தொற்று பரிசோதித்ததில் பாசிட்டிவ் இருப்பதாக கண்டறியப்பட்டது.

அந்த வகையில் 8 லிருந்து 15 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியிருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவியது. இதையடுத்து அந்த தொழிற்சாலையின் முக்கிய அலுவலர்கள் வீட்டிலிருந்து பணி செய்வதாக இந்நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களிடம் கேட்டபோது 'அப்படி எதுவும் இல்லை.

வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்கள் யாருக்கும் நோய் தொற்று இல்லை' என்றனர். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிமாறனிடம் கேட்டதற்கு இதுவரை அதுபோன்ற தகவல் எதுவும் இல்லை. ராணிப்பேட்டை தொழிற் பேட்டையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றார். சிப்காட்டில் ஓமைக்ரான் என்பது வதந்தி என்றும் அவர் கூறினார்.