நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் மக்கள் அதிகளவிலான செலவுகளை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் சாமனிய மக்கள் வாழ்வில் 5 முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று தான் சொல்லவேண்டும்.
1. எஸ்பிஐ கிரெடிட் கார்டு கட்டணம்
எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் மாத தவணை முறையில் பொருட்களை வாங்கும்போது இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.
அதாவது கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு செயல்பாட்டு கட்டணமும், அதனுடன் வரியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 99 ரூபாய் செயல்பாட்டு கட்டணமும், அதனுடன் வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2. பஞ்சாப் நேஷனல் வங்கி சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் குறைப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி சேமிப்பு கணக்கில் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தினை குறைத்துள்ளது. இது அடிப்படை புள்ளிகள் அதாவது bps எனப்படும் basis point 10 புள்ளிகள் வரை குறைத்துள்ளது.
இது பிஎன்பி கணக்கில் 10 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு, வருடத்திற்கு 2.80 விழுக்காடாகும், இதே 10 லட்சம் ரூபாய்க்கு மேலான டெபாசிட்களுக்கு வருடத்திற்கு 2.85 விழுக்காடு ஆகவும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
3. லைஃப் சர்டிபிகேட் கடைசி தேதி
80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை தெரிவிக்க ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு ஜீவன் பிரமான பத்திரம் ஆவணத்தினை சமர்பிக்க வேண்டும்.
இதனை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ம் தேதிக்குள் பென்சன் வாங்குவோர் சமர்பிக்க வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் மாதம் முதல் உங்களுக்கு பென்சன் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம்.
4. 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டி விலை அதிகரிப்பு
14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டியின் விலை அதிகரித்துள்ளது. தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால் இந்த விலை உயர்வானது டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வானது 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக அதிகரித்துள்ளது.
5. சிலிண்டர் விலை உயர்வு
சிலிண்டர் விலை டிசம்பர் 2021 முதல் தற்போதைய விலையில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு விலை அப்படியே இருந்தாலும் OMCகள் வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளன.
டெல்லியில் 2000.50 ரூபாயாக இருந்த 19 கிலோ வர்த்தக சிலிண்டர்களின் விலை டிசம்பர் 1ஆம் தேதி முதல் 2,104 ரூபாயாக இருக்கும். கொல்கத்தாவில் வர்த்தக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101 அதிகரித்து ரூ.2,174.5 ஆக உள்ளது. முன்னதாக இதன் விலை ரூ.2073.5 ஆக இருந்தது.
மும்பையில் வர்த்தக எரிவாயு விலை ரூ.2,051 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இதன் விலை ரூ.1,950 ஆக இருந்தது. அதே சமயம் சென்னையில் 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2,234.50 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இதன் விலை ரூ.2,133 ஆக இருந்தது.
நாளுக்கு நாள் உயரும் விலைவாசிகள்! டிசம்பர் 1ஆம் தேதி முதல் சாமனிய மக்கள் வாழ்வில் 5 முக்கிய மாற்றங்கள்!!