குறள் : 587
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பா டில்லதே ஒற்று.
மு.வ உரை :
மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.
கலைஞர் உரை :
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.
சாலமன் பாப்பையா உரை :
ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.
Kural 587
Maraindhavai Ketkavar Raaki Arindhavai
Aiyappaatu Illadhe Otru
Explanation :
A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.
இன்றைய பஞ்சாங்கம்
01-12-2021, கார்த்திகை 15, புதன்கிழமை, துவாதசி திதி இரவு 11.36 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. சித்திரை நட்சத்திரம் மாலை 06.47 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 01.12.2021
மேஷம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
ரிஷபம்
இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிலிருந்து வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
கன்னி
இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கும்பம்
இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்ப்பது உத்தமம்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001