குறள் : 594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
மு.வ உரை :
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
கலைஞர் உரை :
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.
சாலமன் பாப்பையா உரை :
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.
Kural 594
Aakkam Adharvinaaich Chellum Asaivilaa
Ookka Mutaiyaa Nuzhai
Explanation :
Wealth will find its own way to the man of unfailing energy.
இன்றைய பஞ்சாங்கம்
08-12-2021, கார்த்திகை 22, புதன்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.26 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. திருவோணம் நட்சத்திரம் இரவு 10.39 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் இரவு 10.39 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 08.11.2021
மேஷம்
இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் அனுகூலமான பலன் கிட்டும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய மனிதர்களின் ஆறுதல் வார்த்தைகளால் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
கடகம்
இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்தில் ஒற்றுமையும், பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
துலாம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்தநிலை மாறும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கொடுத்த கடன் திரும்ப பெறுவதில் தாமதநிலை உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.
மகரம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். மன அமைதி இருக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.
கும்பம்
இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மீனம்
இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrolog
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,