குறள் : 596
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
மு.வ உரை :
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும் அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
கலைஞர் உரை :
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை :
நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.
Kural 596
Ulluva Thellaam Uyarvullal Matradhu
Thallinun Thallaamai Neerththu
Explanation :
In all that a king thinks of let him think of his greatness; and if it should be thrust from him (by fate) it will have the nature of not being thrust from him.
இன்றைய பஞ்சாங்கம்
10-12-2021, கார்த்திகை 24, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி இரவு 07.09 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. சதயம் நட்சத்திரம் இரவு 09.48 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 10.12.2021
மேஷம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் வசூலாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்றாலும் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
கடகம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் மற்றவர்களிடம் பேசும் போது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
கன்னி
இன்று உங்களுக்கு அதிகாலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்
இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகலாம். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும்.
மகரம்
இன்று நீங்கள் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படவும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.
கும்பம்
இன்று நீங்கள் புது தெம்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகமான பலன் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் உண்டாகும்.
மீனம்
இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கப் பெறும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,