குறள் : 597
சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
மு.வ உரை :
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும் அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
கலைஞர் உரை :
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை :
தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.
Kural 597
Sidhaivitaththu Olkaar Uravor Pudhaiyampir
Pattuppaa Toondrung Kaliru
Explanation :
The strong minded will not faint even when all is lost; the elephant stands firm even when wounded by a shower of arrows.
இன்றைய பஞ்சாங்கம்
11-12-2021, கார்த்திகை 25, சனிக்கிழமை, அஷ்டமி திதி இரவு 07.13 வரை பின்பு வளர்பிறை நவமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.32 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 10.32 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. துர்காஷ்டமி. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 11.12.2021
மேஷம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். சிலருக்கு புது பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வருமானம் பெருகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும். மன அமைதி ஏற்படும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு தாராள தன வரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதூர்யமாக செயல்பட்டால் சாதகமான பலன்களை அடையலாம். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.16 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை.
சிம்மம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.16 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
கன்னி
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.
துலாம்
நீங்கள் இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பிரச்சினையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
தனுசு
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
மகரம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற நல்ல பலன்களும் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். உடல் உபாதைகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதயான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற பொறுமையும், உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் முக்கியம். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும்.