குறள் : 606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
மு.வ உரை :
நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும் சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
கலைஞர் உரை :
தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை :
நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்திருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.
Kural 606
Patiyutaiyaar Patramaindhak Kannum Matiyutaiyaar
Maanpayan Eydhal Aridhu
Explanation :
It is a rare thing for the idle even when possessed of the riches of kings who ruled over the whole earth to derive any great benefit from it.
இன்றைய பஞ்சாங்கம்
20-12-2021, மார்கழி 05, திங்கட்கிழமை, பிரதமை திதி பகல் 12.37 வரை பின்பு தேய்பிறை துதியை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 07.46 வரை பின்பு புனர்பூசம். சித்தயோகம் இரவு 07.46 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. ஆருத்ரா தரிசனம். நடராஜர் வழிபாடு நல்லது.
இராகு காலம்
காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் - 20.12.2021
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
மிதுனம்
இன்று உத்தயோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிட்டும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். பண விஷயத்தில் சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நண்பர்களின் சந்திப்பு நற்பலனை அளிக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் சிறுசிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபார ரீதியாக எந்த செயலிலும் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், கவலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வெளிப் பயணங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். கூட்டாளிகளின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வந்து சேரும்.
கும்பம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்-றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப்பலன் உண்டாகும். தொழிலில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.
மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது. வீட்டில் பெரியவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துகள் ரீதியாக எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,