குறள் : 608
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்
மு.வ உரை :
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால் அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.
கலைஞர் உரை :
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை :
குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.
Kural 608
Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku
Atimai Pukuththi Vitum
Explanation :
If idleness take up its abode in a king of high birth it will make him a slave of his enemies.
இன்றைய பஞ்சாங்கம்
22-12-2021, மார்கழி 07, புதன்கிழமை, திரிதியை திதி மாலை 04.52 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பூசம் நட்சத்திரம் இரவு 12.45 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்
மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
இன்றைய ராசிப்பலன் - 22.12.2021
மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் சிக்கல்கள் குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். அலுவலகத்தில் வேலைபளு கூடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். எடுக்கும் காரியங்களில் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.
கடகம்
இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வெளிப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
கன்னி
இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிட்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன்கள் ஓரளவு குறையும்.
தனுசு
இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். தேவையற்ற வழயில் செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.
மகரம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். சுப பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வங்கி சேமிப்பு உயரும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். வருமானம் பெருகும்.
மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியான பிரச்சினைகள் சுமூகமாக முடியும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அனுபவமுள்ளவரின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு உதவும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,