குறள் : 610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
மு.வ உரை :
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.
கலைஞர் உரை :
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை :
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.
Kural 610
Matiyilaa Mannavan Eydhum Atiyalandhaan
Thaaaya Thellaam Orungu
Explanation :
The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.
இன்றைய பஞ்சாங்கம்
25-12-2021, மார்கழி 10, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 08.10 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூரம் நட்சத்திரம் பின்இரவு 05.06 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 05.06 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம்
காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 25.12.2021
மேஷம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தாமத பலனை தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். கடன் பிரச்சினை தீரும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் வரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை வராத கடன்கள் இன்று வசூலாகும்.
கடகம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கலாம். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.
கன்னி
இன்று அலுவலக பணிகளில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனகவலைகள் தோன்றும். வியாபாரத்திற்கான வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
துலாம்
இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம்
இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோக முன்னேற்றத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
மகரம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.
கும்பம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
மீனம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,