குறள் : 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
மு.வ உரை :
முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல் பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.
கலைஞர் உரை :
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை :
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.
Kural 614
Thaalaanmai Illaadhaan Velaanmai Petikai
Vaalaanmai Polak Ketum
Explanation :
The liberality of him who does not labour will fail like the manliness of a hermaphrodite who has a sword in its hand.
இன்றைய பஞ்சாங்கம்
28-12-2021, மார்கழி 13, செவ்வாய்க்கிழமை, நவமி திதி மாலை 06.10 வரை பின்பு தேய்பிறை தசமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 04.11 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம்
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 28.12.2021
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம்.
மிதுனம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வியாபார ரீதியான வங்கி கடன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் ஏற்படும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள்.
சிம்மம்
இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உங்களுக்கு உள்ள நெருக்கடி சற்று குறையும். பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்-.
கன்னி
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். குடும்பத்தில் பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
துலாம்
இன்று பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் சில தடங்கலுக்குப் பின் வெற்றியை தரும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிகம்
இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
மகரம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
கும்பம்
இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.44 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் மதியத்திற்கு பின் நற்பலன் கிட்டும். பொருளாதார பிரச்சினை குறையும்.
மீனம்
இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.44 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் ரிதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,