ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தேவதானம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சுமார் 7மணி அளவில் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு இரும்பு லோடு ஏற்றி வந்த ஈச்சர் லாரி மீது தர்மபுரியிலிருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேலூரை நோக்கி வந்த ஈச்சர் லாரி மீது மோதியதில் கார் சாலையிலேயே தலைகுப்புற கவிழ்ந்து மிகப்பெரிய விபத்துக்குள்ளானது.

பின்னர் காரில் பயணம் செய்த தர்மபுரியை சேர்ந்த முகிலன் அருணா ஆகியோர் பலத்த காயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் ஈச்சர் லாரியில் இருந்த ஆந்திராவை சேர்ந்த சபீர் பாஷா -27 என்பவர் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.