🌟 1955ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி கார்டிஃப், வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

🌟 1969ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பெண் இயக்கத்திற்காகப் பாடுபட்ட சமூக சீர்த்திருத்த சிந்தனையாளர் சகோதரி சுபலட்சுமி மறைந்தார்.


முக்கிய தினம் :-


சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

👪 சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

👪 ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியத்தை நிறுவியது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.

👪 நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள மக்களிடம் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள், அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்படவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.


பிறந்த நாள் :-


ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப்

👉 அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ராபர்ட் ஜேமிசன் வான் டி கிராஃப் 1901ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார்.

👉 அவர் சிறுவயதில் கால்பந்து விளையாடும்போது கால் முறிந்ததால் பல மாதங்கள் வீட்டிலிருந்தார். அப்போது இன்ஜின்கள் குறித்து பல நூல்களைப் படித்தார்.

👉 பின்பு அலபாமா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1924ஆம் ஆண்டு மேரி க்யூரி அணுக்கருவை குறித்து சில செயல்முறை விளக்கங்களை கொடுத்ததை கண்டு கவரப்பட்ட இவர் அணு ஆற்றல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.

👉 மேலும், இவர் மின்னியல் ஆக்ஸிலரேஷன் துறையிலும் பல மேம்பாடுகளை செய்துள்ளார். கெல்வின் வகை உயர் மின்னழுத்த ஜெனரேட்டரை மேம்படுத்தும் முயற்சியை தொடங்கி இறுதியாக, 7 மில்லியன் வோல்ட் உற்பத்தி செய்யும் 43 அடி உயர ஜெனரேட்டரை உருவாக்கினார். இந்த ஜெனரேட்டருக்கு 1935ஆம் ஆண்டு உரிமம் பெற்றார். இது மருத்துவத்துறைக்கு உதவியாக இருந்தது.

👉 இரண்டாம் உலகப்போரில் இவரது ஜெனரேட்டரை பயன்படுத்தி கடற்படை தளவாடங்களை எக்ஸ்-ரே ஆய்வு செய்வதற்கான பொறுப்பில் நியமிக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு அணு ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த பல சாதனங்களைக் கண்டுபிடித்த வான் டி கிராஃப் 65-வது வயதில் (1967) மறைந்தார்.