திருவலம் பொன்னை யாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் கடந்த 23ம் தேதி திடீரென விரிசல் ஏற்பட்டதை ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்து அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து ரயில்கள் ராங்லைனில் காலதாமத் தில் இயக்கப்பட்டது. மேலும் சென்னை சென்ட் ரலில் இருந்து ஜோலார் பேட்டை வரை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை பீச்சில் இருந்து வேலுார் கன்டோன் மென்ட் வரை செல்லும் விரைவு மின்சார ரயில், அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை கடந்த 23ம் தேதி மாலை திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றியதால் நேற்று ரயில் போக்குவரத்து சீரானது. இதனால் நேற்று சென்னையில் இருந்து ஏலகிரி மற்றும் வேலுார் விரைவு மின்சார ரயில், அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்கள் கடந்த 4 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை இயக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.