குறள் : 624
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து
மு.வ உரை :
தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.
கலைஞர் உரை :
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
சாலமன் பாப்பையா உரை :
செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.
Kural 624
Matuththavaa Yellaam Pakatannaan Utra
Itukkan Itarppaatu Utaiththu
Explanation :
Troubles will vanish (i.e. will be troubled) before the man who (struggles against dificulties) as a buffalo (drawing a cart) through deep mire.
இன்றைய பஞ்சாங்கம்
07-01-2022, மார்கழி 23, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.10 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 06.19 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.
இராகு காலம்
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 07.01.2022
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட கால தாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பிள்ளைகள் படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் இருந்த தாமத நிலை விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நிலவிய கடன் பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.
கன்னி
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
தனுசு
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சினைகள் தீரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் இருக்காது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,