குறள் : 640

முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்

மு.வ உரை :

(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர் முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.

கலைஞர் உரை :

முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.

சாலமன் பாப்பையா உரை :

செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.

Kural 640

Muraippatach Choozhndhum Mutivilave Seyvar
Thirappaatu Ilaaa Thavar

Explanation :

Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects although they may have contrived aright.

Horoscope Today: Astrological prediction for January 23, 2022 | Today rasi palan - 23.01.2022


இன்றைய பஞ்சாங்கம்

23-01-2022, தை 10, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி காலை 09.12 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திரம் நட்சத்திரம் பகல் 11.09 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பகல் 11.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். 

இராகு காலம்

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 23.01.2022

மேஷம்

இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெண்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப் பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்

இன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

கடகம்

இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

சிம்மம்

இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். 

கன்னி

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

துலாம்

இன்று தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை. வீட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உறவினர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் இருப்பது நல்லது.

மீனம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001,