தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.

அப்போது அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலா மணி,நிர்வாகிகள் வெங்கட்ரமணன், ரகுநாதன், குனாசீலன், கவுதம், சீனிவாசன் உள்ளிட்டோர் பொது மேலாளரிடம் மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:
சென்னையில் இருந்து அரக்கோணத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் புளியமங்கலம் வரை குறித்த நேரத்துக்கு வந்து விடுகிறது. அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்குள் வருவதற்கு பெரும்பாலான நாட்களில் அரை மணி நேரமாகி விடுகிறது.

இங்கு 4 தண்டவாளங்கள் இருந்தும் இப்பிரச்னை ஏற்படுகிறது. இதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டியது மிகமிக அவசியமாகிறது.

அரக்கோணம் இரட்டைக்கண் பாலத்தில் வெள்ளம்போல் தண்ணீர் தினமும் வருகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வந்து தேங்கி நிற்கிறது. 157 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரட்டைக்கண் பாலம் உறுதி தன்மையுடன் இருக்க தண்ல்ணீர் தேங்காமல், ஸ்டேஷனில் இருந்து வெளியேறும் தண்ணீர் பாலத்தில் விடாமல் இருக்க வேண்டும். அதில் கூறியிருப்பதா

அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு இயக்கப்படும். விரைவு மின்சார ரயில் சித்தேரியில் நின்று செல்ல வேண்டும். சித்தேரியில் நடை மேம்பாலம் கட்ட வேண்டும். அரக்கோணத்தில் இருந்து வேலுாருக்கு இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில், அரக்கோணத்தில் இருந்து பெங்களூருக்கு இயங்கி வந்த பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும்.

அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு மாலை 7 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும். அதே போல் செங்கல்பட்டில் இருந்து காலை 5.30 மற்றும் 7 மணிக்கு அரக்கோணத்துக்கு ரயில்கள் இயக்க வேண்டும்.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டில் நின்று செல்கிறது. அந்த ரயில்களி செல்வதற்காகவும், தென் மாவட்டத்தில் இருந்து அரக்கோணம் வரும் பயணிகளின் வசதிக்காகவும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும்.

மோசூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றி பயணிகள் வந்து செல்வதற்கு வசதியாக ரோடு போட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பொது மேலாளர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.