வேளாண்மை இயந்திர மயமாக்கல் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி வேளாண் இயந்திரங்கள் பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவருடைய விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான (www. agrimachinery.nic.in) என்ற இணையதளத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும். இயந்திரங்கள், கருவிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்யலாம்.

நடப்பு ஆண்டில் முதல் தவணையாக ரூ.20.33 லட்சம் மதிப்பில் 30 இயந்திரங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். விவசாயிகள் இயந்திர கருவியை தேர்வு செய்தால் கருவியை தேர்வு செய்தால் அவர்கள் 1,2,3 என எண் இடப்பட்டு காத்திருப் போர் பட்டியலில் சேர்க் கப்படுவார்கள்.
ஏற்கனவே கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, இந்த 2021-22 ஆண்டுக்கு புதியதாக பதிவு செய்ய வேண்டும். ஒரு நிதியாண்டில் தனக்கு தேவைப்படும். ஏதாவது இரண்டு வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மட்டுமே மானிய விலையில் விவசாயிகள் வாங்க முடியும்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அதே வகையான வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மானிய விலையில் வாங்க முடியும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் எண்: 314, பாலார் அணைக்கட்டு ரோடு, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம் எனும் விலாசத்தில் உள்ள வேளாண் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.