தமிழகத்தில் அசுர பாய்ச்சலில் தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டு செல்கிறது. 

இன்று 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981 இல் இருந்து 10,978 ஆக உயர்ந்துள்ளது என்றும் தமிழகத்தில் மேலும் 74 நபர்களுக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 39 ஆயிரத்து 253 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 ஆயிரத்து 978 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு அசுர பாய்ச்சலில் தொற்று உயர்ந்து கொண்டு செல்கிறது.

தமிழகத்தில் 10,932 வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 46 பேர் என 10,978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981 இல் இருந்து 10,978 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 5,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.சென்னையில் ஏற்கனவே 4,531 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 5,098 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 1,525 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27,10,288 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 40,260 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் மேலும் 10 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,843 ஆக உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 5 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் தினசரி எண்ணிக்கையில் ஒரே நாளில் 2,000 ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கொரோனா பாதித்த மாவட்டங்கள்,

* செங்கல்பட்டில் 1,039 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,332 ஆக அதிகரித்துள்ளது.

* திருவள்ளூரில் 514 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 591 ஆக உயர்ந்துள்ளது.

* கோவையில் 408 ஆக இருந்த ஒருநாள் கொரொனா பாதிப்பு தற்போது 585 ஆக அதிகரித்துள்ளது.

* காஞ்சிபுரத்தில் 257 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 309 ஆக உயர்ந்துள்ளது.

* திருச்சியில் 184 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 237 ஆக அதிகரித்துள்ளது.

* தூத்துக்குடியில் 160 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 202 ஆக உயர்ந்துள்ளது.

* மதுரையில் 149 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 314 ஆக உயர்ந்துள்ளது.

* வேலூரில் 189 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 243 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 185 ஆக உயர்ந்துள்ளது. ஒமைக்ரான் பாதித்த179 பேர் குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.