ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேற்று மாலை பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
மாலை 4 மணிக்கு பிரஸ் மீட் என்று முதலில் அறிவித்த நிலையில் சந்திப்பு நேரம் மாலை 4,30 என்று கூறப்பட்டது. அதன் பிறகு 5 மணி அளவில் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் தனது நேர்முக உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரஸ் மீட் வேண்டாம். நிருபர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறி அனுப்பிவைத்தார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், கலெக்டர் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் டெஸ்ட் எடுக்க உத்தரவிடப்பட் டுள்ளது.