இந்தியாவில் கொரோனா வைரஸ் 3வது அலை தொடங்கியுள்ளதாகவும் பாதிப்பு சுனாமி போல கடுமையாக இருக்கும் என.
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் செய்தி தொடர்பாளர்களிடம் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் கடுமையாக பரவியது.
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் ஏராளமான மக்களை பலி கொண்டது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்த வைரஸ் இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது.
சுமார் 8 மாதங்களுக்கு மேலாகிவிட்டது ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான நபர்கள் வேலையில்லாமல் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும்.
இந்த நிலையில் 3வது அலை பிப்ரவரி மாத இறுதியில் உச்சத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் சென்னையிலும் பாதிப்பு மிக அதிகமாக ஏற்பட தொடங்கி உள்ளது.
இதை அடுத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டமானது தொடர்ந்து அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 3வது அலை தொடங்கியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் 17வது கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் சுமார் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் மெகா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா சுப்பிரமணியம்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை இப்பொழுது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது எனவும்.
காவல்துறை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் 3வது அலை பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் டெல்டாவைரஸ், ஓமிக்ரான், இரண்டும் சேர்ந்து தற்போது 3வது சுனாமி அலை போல அதிவேகமாக பரவி வருகிறது எனவும்.
எனவே மக்கள் தொடர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், அது மட்டுமில்லாமல் அரசு வெளியிடும் சுகாதார நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடித்தால் ஊரடங்கு உத்தரவை முழுவதும் தவிர்த்து விடலாம் என தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்
சென்னையில் வரும் நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும்.
இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க இருப்பதாகவும் அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 15 வயதை கடந்த மாணவ மாணவிகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் எனவும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மற்றும் முன்கள பணியாளர்களுக்கும்.
பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்த திட்டம்
வரும் 10ம் தேதியில் இருந்து பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது வரும் நாட்களிலும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மாதங்களில் இந்த பாதிப்பு உச்சத்தைத் தொட அதிகளவு வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் இப்போது கவனமாகவும் மிகவும் தங்களை பாதுகாத்துக் கொள்ள இருக்க வேண்டும்.