வேலுார் சரக டிஐஜி ஆனிவிஜயா நேற்று மாலை அரக்கோணம் தாலுகா மற்றும் அரக்கோணம் டவுன், மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் திடீர் ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் போலீஸ் ஸ்டேஷன்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்ற வாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்.

குறிப்பாக பொதுமக்களிடம் போலீசார் தன்மையாக பேச வேண்டும். யாரையும் கடிந்து பேசக் கூடாது. நாம் பப்பளிக் சர்வன்ட் என்பதை மறந்து விடக்கூடாது என்றார்.

தொடர்ந்து போலீசாரிடம் அவர் குறைகளை கேட்டபோது சிலர் டிரான்ஸ்பர் கேட்டதற்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி தெரிவித்தார்.