சோளிங்கர் அருகே தீ விபத்தில் 3 ஏக்கர் கரும்பு கருகி சேதமானது.

சோளிங்கர் அடுத்த ரெண்டாடி ஊராட்சி கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (53),விவசாயி. இவர் தனது 4 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். நேற்று முன்தினம் இரவு கரும்பு தோட்டத்தில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹரிஹரன் உடனடியாக சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 3 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரும்பு தோட்டத்திற்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது தீவிபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.