ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் யூனியனுக்கு உட்பட்ட பாணாவரம், மங்கலம், மேல் வீராணம், கீழ் வீராணம் உள்ளிட்ட கிராமங்களில் தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலம் வழங்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, நெய் உள்ளிட்ட 21 இலவச பொருட்கள் பொங்கல் தினமான நேற்று வரை கிடைக்காததால் பொதுமக்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.

சிலர் பொங்கல் தினத்தன்று பொருட்கள் தருவார்களா என, ரேஷன் கடைகளுக்கு சென்றனர். ஆனால் கடைகள் பூட்டி இருந்ததால் ஏமாற்றத் துடன் திரும்பினர்.