தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் - முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 16-ம் தேதி மீண்டும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.


 
தமிழகத்தில் வரும் 31 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

ஊரடங்கு காலங்களில் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் அவற்றுடன் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 16-01-2022 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். 

பொங்கல் விழாவுக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். 

மேலும் 14ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.