கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழக அரசையும், டாஸ்மாக்கையும் இரண்டாக பிரித்து விட முடியாது. ஏனெனில் தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான்.

அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் 'குடிமகன்'களை கையில் பிடிக்க முடியாது. இந்த நாட்களில் மட்டும் பலநூறு கோடிகள் வருமானம் பார்த்து, அரசுக்கு பெரும் நிதி வருவாயை அள்ளி கொடுக்கிறது டாஸ்மாக்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதுபானம் விற்பனை என டாஸ்மாக் நிர்வாகம் தகவல்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 98 டாஸ்மாக் கடைகள் உள்ளன பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளில் மதுபான விற்பனை களைகட்டியது.

மாவட்டத்தில் 13 மற்றும் 14 ஆகிய இரு தினங்களில் 9 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது என ராணிப்பேட்டை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தகவல்