தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய  அமைச்சர் மா.சுப்பிரமணியன், '3வது அலையை பொறுத்தவரை தீவிர சிகிக்சை என்பது குறைவாகவே உள்ளது. எனவே கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு மிதமான அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்' என்றார்.

'மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. அதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.