வாலாஜாபேட்டை அடுத்த தென் கடப்பந்தங்கள் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் தன்ராஜ்.

இவரது மகன் வருண் (24), வாலாஜாபாத் அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.
அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார். தற்போது அந்த பெண் இவரது காதலை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்த அவர், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பொங்கலன்று வீட்டில் இருந்தபோது, உடலில் மண் எண்ணை ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் வெப்பம் தாங்காமல் அலறியுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.