மூலிகைச் சமையல் வல்லாரைத் துவையல்


தேவையான பொருள்கள் அளவு
வல்லாரை இலை 100 கிராம்
பச்சை மிளகாய் 2
சின்ன வெங்காயம் 1
மிளகு 10 எண்ணிக்கை
பூண்டு 5 பல்
பெருங்காயம் இரண்டு சிட்டிகை
மஞ்சள் 5 சிட்டிகை
உப்பு, நல்லெண்ணெய் தேவையான அளவு


செய்முறை


பெருங்காயம், மஞ்சள், உப்பு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி அவற்றுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைத்துத் துவையல் செய்யவும். இந்தத் துவையலை வாரம் மூன்று முறையாவது. வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கவும். இதனால் அவர்களுடைய மூளை திறன் அதிகரிக்கும்.

சில குழந்தைகள் அதிக சுறுசுறுப்பாக (Hyper Active) இருப்பார்கள். இவர்களை ஒரு இடத்தில் தொடர்ந்து பிடித்து வைக்க முடியாது. எதையாவது தேவையில்லாமல் பேசுவது, கோபமடைவது, சண்டையிடுவது, காரணமின்றி அழுவது, நினைவாற்றல் குறைவது என இருப்பார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு வல்லாரைத் துவையல் ஒரு வரப்பிரசாதம்.