மாஸ்க் அணியாவிட்டால் வெளியேற்றலாம்... அரசு திடீர் எச்சரிக்கை
அலுவலகங்களில் முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பணியிடங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்களை தனியார் நிறுவனங்கள் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும், அறிகுறி உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 நபர்களுக்கு அதிகமாக இருக்கும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும் - பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது