தமிழகத்தில் 5 ஆயிரத்தை நெருங்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 2,731ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 4862 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 4862 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். 688 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 27,60,449 ஆக அதிகரித்துள்ளது. 27,07,058 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பானது 36,814 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 2481 பேரும் செங்கல்பட்டில் 596 பேரும் கோவையில் 259 பேரும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிய ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 121 ஆக உள்ளது. இதில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரில் 3 பேர் கேரளா, புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களை சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.