ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா பாகவெளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(75). இவரின் பேத்தி ஆனந்தி (16). வாலாஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.இவரின் பெற்றோர்கள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.
இதனால் தாத்தா செல்வராஜ் பாட்டி ஆயம்மாள் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆனந்தி நீண்ட நேரமாக செல்போன் பார்த்து உள்ளார். இதனை கண்ட ஆயம்மாள் ஆனந்தியை கண்டித்துள்ளார். மேலும் அவரிடமிருந்து செல்போனை பிடுங்கி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தி வீட்டில் உள்ள பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயக்கம் அடைந்துள்ளார். விவர மறிந்து அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து செல்வராஜ் காவேரிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன், ராஜன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.