ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் நடந்த மக்கள் குறைதீர்வு முகாமில் கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், அரக்கோணம் எம்பி., ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறைதீர்வு முகாமில் 528 பயனாளிகளுக்கு ரூ.3.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார். அதன்படி, வாலாஜா பிடிஓ., அலுவலகத்தில் 90 பயனாளிகளுக்கு ரூ:79 லட்சத்து 99 ஆயிரத்து 979 மதிப்பில் உதவிகள், அம்மூர் டவுன் பஞ்சாயத் தில் 69 பேருக்கு ரூ.35 லட்சத்து 78 ஆயிரத்து 325 மதிப்பிலும்,

ராணிப்பேட்டை நகரத்தில் 73 பேருக்கு ரூ.48 லட்சத்து 3 ஆயிரத்து 980 மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதேபோல், மேல்விஷாரம் நகரில் 65 பேருக்கு ரூ.54 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலும், ஆற்காடு நகரில் 61 பேருக்கு ரூ.49 லட்சத்து 9 ஆயிரத்து 983 மதிப்பிலும், கலவை டவுன் பஞ்சாயத்தில் 125 பேருக்கு ரூ.65 லட்சத்து 69 ஆயிரத்து 904 மதிப்பிலும், திமிரியில் 21 பேருக்கு ரூ.35 லட்சத்து 98 ஆயிரத்து 412 மதிப்பிலும், விளாப்பாக்கத்தில் 24 பேருக்கு ரூ.7 லட்சத்து 22 ஆயிரத்து 412 என மொத்தம் ரூ.3 கோடி 76 லட்சத்து 25 ஆயிரத்து 995 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.